Posts

இன்றொரு சம்பவம்!!

கேன்சர் நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்ட நோயாளிகளின் உடலின் எப்பாகத்தில் கேன்சர் ஆக்கிரமித்துள்ளதென்பதைக் கண்டறியும் பரிசோதனை (practical session) இன்று மஹரகம புற்றுநோய் வைத்திய சாலையில் நடைபெற்றது. "புற்றுநோய்க்கட்டியின்(Tumor) அமைவிடத்தை அறிதல், ரேடியோதெரபி முறை (Radiotherapy) மூலம் குணப்படுத்த திட்டமிடுதல்" போன்றவையே இன்றைய தலைப்புக்களாய் இருந்தன. வழக்கமாக "டம்மி பான்டம்" (dummy phantom - மனித உடலையொத்த போலி உடல்) பயன்படுத்தப்பட்டே பரிசோதனைகள் நடைபெறும். வழக்கத்திற்கு மாறாக இன்று ஒரு நோயாளியினை அழைத்து வந்தனர். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சையில் இது முக்கியமான ஓர் அங்கமாகும். அங்கு பொறுப்பாகவுள்ள மருத்துவ பௌதிகவியலாளர்கள் (medical Physicists) தம் வேளையைத் தொடர, நாமோ பார்வையாளர்களாய் இருந்து அவதானங்களை மேற்கொண்டு புதிய விஷயங்களைக் கற்றோம். அவ்வேளையில் "நோயாளியின் மனநிலை என்ன" என்பதையும் நேரடியாகக் கண்டோம். விடயத்திற்கு வருகிறேன்... தற்செயலாய் நோயாளியின் மருத்துவ அறிக்கையைக் காண நேரிட்டது. அவரது மூக்கின் வலப்பகுதியில் கேன்சர் கட்டி இருப்பதாய் அறிக்

நியூட்டனின் மூன்றாம் விதியின் புது வடிவம்!!!!

இலகு விஞ்ஞானம் கற்போம் வாரீர்!!! நியூட்டனின் வெள்ள விதிகள்: 1 ஆம் விதி: ஊர்வாசிகளின் கை படாத போது, ஊத்தை நிறைந்த கால்வாய் ஊத்தை நிரம்பிய படியும், அடைக்கப்பட்ட கால்வாய்கள் அடைக்கப்பட்டும் இருக்கும். 2 ஆம் விதி: வெள்ளநீர்மட்ட அதிகரிப்பு வீதமானது, அடைக்கப்பட்ட கால்வாய்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதசமனாகும். 3 ஆம் விதி: ஒவ்வொரு கால்வாய் ஆக்கிரமிப்புக்கும், சமனும் எதிருமான வெள்ளநீர் ஆக்கிரமிப்பு உண்டு.

இயற்கை!

சுமை போல தோன்றினாலும் மரங்களை வெட்டாதே! அழிக்கப்படுவது சுமையல்ல! பசுமை!!

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

ஓய்வு பெற்றது அணியின் பிரபல முன்னணி வீரர்கள் மாத்திரமே, எமது போராட்ட குணமல்ல! தோற்றுக் கொண்டிருக்கிறது மீளமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அணியே! முழுமையாக சீரமைக்கப்பட்ட அணியல்ல!! நமதணியில் அதிகமிருப்பது இளம் இரத்தங்களே!! அனுபவஸ்த்தர்களின் காயங்கள், மாயங்கள் செய்கின்றன வெற்றியில்!! அவமானங்கள் ஒன்றும் புதிதல்லவே!! கத்துக்குட்டியாய் பலவற்றை கண்டுவிட்டே ஜாம்பவான்களுக்கும் புது வியூகங்களைக் கற்றுக் கொடுத்தோம் நாம்!! நிலையான அணியொன்றின் உருவாக்கமே நமது தேவை!! அதுவரை வாங்க வேண்டியதை வாங்குகிறோம், அவமானங்களைத் தாங்குகிறோம்!! கத்துக்குட்டிகள் பாடமெடுப்பின் அதையும் படம் பிடித்து உள்வாங்குகிறோம்!! திட்டங்கள் பல தீட்டி, கிரிக்கெட்டில் புகும் அரசியலை ஒழித்துக்கட்டி, திறமையை மெருகூட்டி, பலவீனங்களை விரட்டி, பலத்தைத் திரட்டி, நிலையானவோர் அணியுடன் நாம் வரப் போவதை அறியத் தருகிறோம் முன்கூட்டி!! மறந்து விடாதீர்கள்!! காயப்பட்ட சிங்கங்களின் கர்ச்சனையோசை உம் காதுகளில் ஒலிக்கத்தான் போகிறது!! இன்னொரு நாட்டு அணிக்கு நீங்கள் ரசிகராயிருக்கலாம், அவர்களின் திறமை கண்டு!! ஆனால

வறியோருடன் இணைந்து பெருநாளைக் கொண்டாடுவோம்!!

பெருநாளுக்கு முந்தைய தினம். சிறார்களின் ஆரவாரம் எங்கும் எதிரொலிக்க, நட்சத்திரங்கள் போல் ஒவ்வொரு வீட்டு முன்றல்களும் ஜொலி ஜொலிக்க, கடைத் தெருக்கள் கூட்டம் நிறைந்து பர பரக்க ஊரே கலகலத்துக் காணப்பட்டது. பெருநாட் தினத்தை மகிழ்ச்சியுடன் ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அவ்விரு சிறார்களோ கவலையுடன் கடந்து செல்லத் தயாராய் இருந்தனர். வறிய குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் அவ்விருவரும் பிரதிபலித்தனர். வெளியூர்களுக்கு தினசரி கூலித் தொழிலுக்குச் செல்லும் தந்தையின் வருமானம் அன்றாட வீட்டுச் செலவுகளுக்கே போதுமாக இருப்பதால், 'சேமிப்பு' என்பது அவர்கள் வாழ்வில் அரிதிலும் அரிதே! இச்சிறார்களுக்கு கல்வி எனும் சொத்தை அளித்து வந்ததால் அச் சிறார்களுக்கு குடும்ப நிலை பற்றியறியும் மனோ பக்குவம் இருந்தது. அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்காக பதினான்கு வயது நிரம்பிய மூத்தவர் எட்டு வயதுடைய தம்பியை அழைத்துச் செல்கிறார். தான் காணும் காட்சிகள் தன்னுள் ஆயிரம் கேள்விகளை எழுப்ப, ஒவ்வொன்றாக கேட்கத் துவங்குகிறார் அண்ணனிடம். தம்பி: "நாநா, நாநா.. ஏன் எல்லோரும் பாதைகளில் அங்குமிங்கும் பரபர

உயர்தரப் பரீட்சை!!

மாணவா!! இரண்டு வருடங்களுக்கும் மேலான உன் பொறுமை, எதற்கும் சளைக்காத உன் விடா முயற்சி, சொல்லில் அடங்காத உன் தியாகங்கள் என்பவற்றைக் கடந்து உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறாய். இந்நிலையில் நீ கடைபிடிக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான்! நிதானம். பேரலைகளுக்கு மத்தியில் மீன் பிடிக்க செல்லும் மீனவனை மனதில் வைத்துக் கொள்!! அவனது நிதானமே அவனை வெற்றியுடன் திரும்பச் செய்கிறது. உனது மனதிலும் பேரலைகள் தோன்றும் தருணமே இது. நிதானத்தை கடைபிடி. புதிய விடயங்களைப் படிப்பதை விட படித்தவற்றை மீட்டிப் பார்ப்பதே நன்று. வினாக்களுக்கு விடையளிக்கையில் வேகத்துடன் விவேகத்தையும் கடைபிடி! இலகுவான வினாவிலிருந்து விடையெழுத ஆரம்பிப்பது உகந்தது!! அத்துடன் எழுதிய விடைகளை மீள்பரிசீலனை செய்வது நன்று!! பரீட்சை மண்டபத்தில் காணப்படும் அமைதியான சூழலை உன் உள் மனதிலும் கொண்டு வந்தால் உனக்கு வெற்றி தான்!!! இவ் உயர் தரப் பரீட்சை உங்களுக்கு வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்!! இப்(f)ஹாம் அஸ்லம் B.Sc (hons) in Physics, M.Sc in Medical Physics (UOC)( Reading)

விவேகமற்ற வேகம்!!

இருண்ட இரவில் ஆள் அரவமற்ற பாதையில் அதியுயர் வேகத்தில் புல்லட்டாய்ப் (bullet) பறந்தது அவ்வண்டி! வண்டியினுள் இரு குடும்பம், தன் கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணும், தன் மடியில் சிறு மகளைத் தூங்க வைத்தவராய் அப்பெண்ணின் கணவரும், ஓட்டுனர் பக்கத்து ஆசனத்தில் பருவ வயது மூத்த மகனும் அமர்ந்திருக்க ; அப்பெண்ணின் கணவனின் தங்கையும் அவர் கணவரும் தம்மிரு பாலகர்களுடன் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். இவர்களது பயணமோ இப்பெண்ணின் கணவரை வெளிநாட்டு வேலைக்கு வழியனுப்பி வைக்க விமான நிலையம் நோக்கியதேயாகும்! விமான நிலையத்திற்கு இன்னும் மூன்று நேரத்தினுள் உள்நுழைய வேண்டும் என்னும் ஒரு பணி ஓட்டுநருக்கு வழங்கப் பட்டிருப்பதும் பாதையின் அமைதியுமே இந்த வேகத்திற்கான காரணம்! ஜன்னலினூடு புகும் இதமான குளிர்ந்த காற்றில் வருடலில் ஒவ்வொருவராய்க் கண்ணயர, ஓட்டுனரும் வெளிநாடு செல்ல ஆயத்தமாகும் அப்பெண்ணின் கணவரும் விழித்திருந்தனர். வண்டியின் வேகம் அந்நபரைக் கிலி கொள்ளச் செய்தாலும், பாதையின் அமைதியும் பிரயாணத்தின் அவசரமும் ஓட்டுனரின் திறமை மீது வைத்த நம்பிக்கையும் அவரை அமைதி கொள்ளச் செய்தன. சரியான நேரத்திற்கு வ