வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

ஓய்வு பெற்றது அணியின் பிரபல முன்னணி வீரர்கள் மாத்திரமே, எமது போராட்ட குணமல்ல!
தோற்றுக் கொண்டிருக்கிறது மீளமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அணியே! முழுமையாக சீரமைக்கப்பட்ட அணியல்ல!!
நமதணியில் அதிகமிருப்பது இளம் இரத்தங்களே!! அனுபவஸ்த்தர்களின் காயங்கள், மாயங்கள் செய்கின்றன வெற்றியில்!!
அவமானங்கள் ஒன்றும் புதிதல்லவே!! கத்துக்குட்டியாய் பலவற்றை கண்டுவிட்டே ஜாம்பவான்களுக்கும் புது வியூகங்களைக் கற்றுக் கொடுத்தோம் நாம்!!
நிலையான அணியொன்றின் உருவாக்கமே நமது தேவை!! அதுவரை வாங்க வேண்டியதை வாங்குகிறோம், அவமானங்களைத் தாங்குகிறோம்!! கத்துக்குட்டிகள் பாடமெடுப்பின் அதையும் படம் பிடித்து உள்வாங்குகிறோம்!!
திட்டங்கள் பல தீட்டி, கிரிக்கெட்டில் புகும் அரசியலை ஒழித்துக்கட்டி, திறமையை மெருகூட்டி, பலவீனங்களை விரட்டி, பலத்தைத் திரட்டி, நிலையானவோர் அணியுடன் நாம் வரப் போவதை அறியத் தருகிறோம் முன்கூட்டி!!
மறந்து விடாதீர்கள்!! காயப்பட்ட சிங்கங்களின் கர்ச்சனையோசை உம் காதுகளில் ஒலிக்கத்தான் போகிறது!!
இன்னொரு நாட்டு அணிக்கு நீங்கள் ரசிகராயிருக்கலாம், அவர்களின் திறமை கண்டு!! ஆனால் துரோகம் இழைத்து விடாதீர், சொந்த நாட்டணியை இழிவுபடுத்தி!!
விளையாட்டில் அரசியலையும் இன, மத பேதங்களையும் புகுத்துபவர்கள், சாக்கடை மூளை கொண்ட சில தெரிவுக்குழு அங்கத்தவர்களே!! அவர்களுக்கெதியாய்க் குரல் கொடுத்து திறமையாளர்களை அணியில் உள்வாங்கி சாட்டையடி கொடுக்க நீங்கள் தயாரில்லையா?? தெரிவுக்குழுவினரைக் கேள்வி கேட்கும் உரிமையை உன் நாடு உனக்கு தரவில்லையா??
தோற்பது அங்கே பதினொரு பேரல்ல, இலங்கை எனும் தேசமே!! கிரிக்கெட்டே இலங்கையை உலகறியச் செய்த பெரும் கருவி, சுற்றுலாத்துறை மேம்படவும் காரணமதுவே!!
நம் கிரிக்கெட் வலுவிழந்துவிடின் வெளிநாட்டணிகள் நம்மைத் தேடிவராதே!! தமதணியைத் தொடர்ந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி நாட்டின் பொருளாதாரம் எழுச்சி பெறாதே!! போட்டித் தொடரொன்றினால் கிடைக்கும் ஸ்பான்சர்களும் வருவாய்களும் கிடைக்கப்பெறாதே!!!
எந்த நாட்டு ரசிகனாயிருந்தாலும் நீயுமோர் இலங்கையனே!! இலவசக்கல்வி பெறுபவனே!! இலவச மருத்துவம் கிடைப்பவனே!! இலவச பல்கலைக்கழக கல்வி கற்பவனே!!
உனக்குள்ளுமோர் திறமையிருப்பின், அதை நிரூபிக்க நீ அணிய வேண்டியது இலங்கை ஜேர்சியே!! நமது தாய்நாட்டணியில் திறமை மிகு இலங்கையன் புறக்கணிக்கப்படின் இன மத பேதமின்றி பொங்க வேண்டியது நாமே!!
நமது கூடைப்பந்தாட்ட மகளிரணி கற்றுத்தந்த பாடத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்!! திறமையாளர்களை இனங்கண்டு அணியில் இணைக்க குரல் கொடுப்போம்!! விரைந்து செயற்பட்டு அணியை மீளக் கட்டியெழுப்புவோம்!! திருப்பியடிப்போம்!!
இலங்கையின் நாமம் மீண்டும் ஒலிக்கட்டும்!!
"அவமானம் கண்டால் அடங்கித்தான் போக வேண்டும் என்றில்லை, திருப்பி அடிக்கலாம்"
"தேசத்தின் ஓர் அங்கம் வீழப் பார்க்கிறது, கட்டியெழுப்ப வாரீர்!!
-Ifham Aslam- M.Sc in Medical Physics (University of Colombo)

Comments

Popular posts from this blog

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!