ஏ, கரையானே!

ஏ, கரையானே! "நீ" எனும் ஒற்றைக் காரணத்துக்காய் உன் புற்றைப் பற்றி விமர்சிப்போரைக் கண்டுகொள்ளாதே!
வெளிப்பார்வைக்கு சாதாரணமாய்த் தெரியும் உன் புற்றை விமர்சிப்போரை, உள்ளே வந்து பார்வையிட்ட பின் விமர்சிக்கச் சொல்..
வர மாட்டார்கள் அவர்கள்.. உன் அழைப்புக்கு காது கொடுக்க அவர்களுக்கு நேரமில்லை , அவர்களோ முழுநேர விமர்சகர்களே!!
விஞ்ஞானமே வியக்கும் வித்தையறிந்தவன் நீ! உலகமே காணாத உழைப்பாளி நீ!! விடாமுயற்சிக்கோர் முன்னுதாரணம் நீ!! பௌதிகவியலாளர்களுக்கோர் ஆச்சரியக்குறி நீ!!
பொறாமை கொள்ளும் கசட எண்ணம் படைத்தோர்க்கு எங்கே தெரிய போகிறது உன் தகைமை!!
பொறுமை கொள்ளும் உந்தன் பெருமை பாடவும் உன்னையறிந்த சிறு கூட்டம் எப்போதும் இருப்பதை நினைவில் கொள்!
காற்றில் பறந்தோடும் வார்தையுரைக்கும் வாய்ச்சொல் வீரர்களுக்கு, எங்கே தெரியப்போகிறது "உழைப்பு", "விடாமுயற்சி" எனும் பதங்களுக்கான அர்த்தம்!!
உன்னைப் பற்றித் தெரியவரும் கணத்தில் அளந்து பேசாத வாய்களும் பிளந்து பார்க்குமே!!
## இது வாழ்க்கைக்காக போராடும் மனிதக் கரையான்களுக்கு சமர்ப்பணம்! ##

இப்ஹாம் அஸ்லம் M.Sc Medical Physics (Reading) University of Colombo

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!