சிதைக்கப்பட்ட புள்ளி மான்குட்டி!!

காஷ்மீர் தோட்டத்தில் துள்ளித் திரிந்த பேரழகு மான் குட்டியவள்; வருடும் குளிர்காற்றில் கவி பாடி, நறுமணப் பூந்தோட்டங்கள் மத்தியில் துள்ளித் திரிந்து , வளைந்தோடும் நீரோடைகளில் விளையாடி மலை முகடுகளில் ஓடியாடிய புள்ளி மான் குட்டியவள்!
விதியின் சதியால் காட்டுமிராண்டிக் காட்டுப் பன்றிகள் கூட்டமொன்றின் கண்ணில் இப் பூ மான் குட்டியின் நிழல் விழுந்ததே!!
மோப்பம் பிடித்த கேவலக் காட்டுப் பன்றிக் கூட்டம், தனக்கும் சிறு குட்டிகள் இருப்பதை மறந்து இச்சிறு மான் குட்டியைக் கவர்ந்து சென்றதே!!
சிரித்த முகமுடையவளின் முகம் கறுத்துப் போகுமளவுக்கு அக் கயவக் காட்டுப் பன்றிகள் ஈவிரக்கமின்றி அச் சிறு மான்குட்டியை சிதைத்ததே!!
காவலாளிக் கரடிகள் காசு வாங்கி இவ் அநியாயத்திற்குத் துணை போனதே! சிதைக்கப்பட்ட அச்சிறு மான் குட்டியை வீசி விட்டு அக் கேவலக் காட்டுப் பன்றிக் கூட்டம் அதி கேவலக் கரடிகளின் துணையுடன் வெறி பிடித்த ஓநாய்களிடம் தஞ்சம் புகுந்ததே!
அவ் ஓநாய்கள் அக் காட்டுப்பன்றிகளையும் கேவலக் கரடிகளையும் அதிகாரவர்க்கத்தின் துணையுடன் காப்பாற்றப் பார்க்கிறதே! ஈவிரக்கமின்றி இழைக்கப்பட்ட அநீதியை, அவ் ஓநாய்க் கூட்டம் மறைக்கப் பார்க்கிறதே!
அச் சிறு புள்ளி மான்குட்டிக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை தட்டிக் கேக்க சிறுத்தைக் கூட்டங்கள் புறப்பட வேண்டிய தருணமாய் இது மாறி விட்டதே!
---------------------####--------------------
காஷ்மீரில் நிகழ்ந்த இவ் அநீதி மீண்டும் இவ் உலகின் எம் மூலையிலும் நடக்காதவாறு தண்டனைகள் வழங்கப் பட வேண்டியது நீதித்துறையின் கட்டாயக் கடமையாகும்.
கயவர்களிடமிருந்து தம் குழந்தைகளை பாதுகாக்க ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை தம் கண் காணிப்பிலேயே வைப்பது கட்டாயமாகும். பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என வேறுபாடின்றி துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் நிலையை அடிக்கடி கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்! ஆசிபா எனும் இச்சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக குரலெழுப்புவதும் நம் கடமையே!

இப்ஹாம் அஸ்லம்
M.Sc Medical Physics (Reading)
University of Colombo

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!