முயற்சி Vs வெற்றி (போராட்டம்)

உன்னுள் பல மனக்குமுறல்கள் எந்நேரமும் உன்னை ஆட்டிப் படைப்பின் புரிந்துகொள் ; அமைதியாய் தோன்றும் எரிமலை கூட வெடிக்கும் முன்னே தன்னுள் பல தீக்குமுறல்களை வெடித்துக்கொண்டு தான் இருக்கும்!!
வலிக்கும் உன் பொறுமைகளுக்கும் ஒரு பதிலை காலம் சொல்லத்தான் வேண்டும் ...! உனக்கு ஒரு பதில் கிடைக்கும் வரை உன் முயற்சியைக் கைவிடாதே!!!
நீ வைக்கும் ஒவ்வொரு அடியும் , உன் தோல்விகளுக்கு பதிலடியாய்க் கொடுக்க முற்படு!!
உன்னை வெல்ல யாரும் பிறக்கவில்லை என்று எண்ணாதே; அது கர்வத்தை உண்டு பண்ணக் கூடும்!! நீ எல்லோரயும் வெல்லத்தான் பிறந்திருக்கிறாய் என்று மனதை திடப்படுத்து , அதற்காக உன்னை நீ தயார் படுத்து!!!
நமக்கு நாமே போட்டுக் கொண்ட போலி முட்டுக்கட்டைகளை உடைத்து முன்னேறுவதற்கு அஞ்சாதே!!
உன்னை திடப்படுத்த உன்னாலேயே தான் முடியும் என்பதை மறவாதே!!!


- Ifham Aslam - M.Sc in Medical physics (Reading)

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!