பெண்கள் இல்லாத உலகம்!!

மண்ணில் செடிகளை பயிரிடாத நாம், விந்துக்களை பயிரிட்டு குழந்தைகளை அறுவடை செய்திருப்போம்!
சிறார்களை பலியெடுக்கும் அரக்கர் அரசுக்கள், குழந்தை பெறும் நவீன திட்ட யாப்புக்களை இயற்றிக்கொண்டிருக்கும்!!
தெருவுக்கொரு குழந்தைகள் மையம் தோன்றி குழந்தை வளர்க்கும் தொழில் உருவாகி, அன்பு என்னும் வார்த்தையை கனவிலும் கேட்காதவர்களாய் மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பான்!!
தாய்ப்பாசம், சகோதரிப் பாசம், மனைவியின் அன்பு, ஆசிரியைகளின் அன்பு கலந்த கண்டிப்பு.. இவை கிடைக்காத மனிதன் முன்கோபியாகவும் காட்டு மிராண்டியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பான்!! உணர்வுகள் அற்ற ஜடங்கள் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும், ஏன் வாழ்கிறோம் என்பதயறியாதவர்களாய்!
உலகில் குற்றச்செயல் அதிகரித்திருக்கும், இரத்தம் குடிக்கும் காட்டேரிகளாய் ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கும்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இடைவெளி குறைந்திருக்கும்; நாம் பிறந்த நோக்கமே தெரியாமல் இறந்து கொண்டிருந்திருப்போமே!!
நாம் பிறந்த நோக்கமே படைத்தவனுக்கு நன்றி செலுத்தி படைப்பினங்கள் மீது அன்பு செலுத்தவே!! இறைவன் ஆண், பெண் என இருபாலாரையும் படைத்தது காரணத்துடன்!!
நீ ஒருத்தியிடம் ஏமாந்து விட்டு அல்லது ஒருத்தியால் ஏமாற்றப்பட்டு விட்டு முழுப் பெண்கள் சமூகத்தையும் குறை சொல்லாதே நண்பா!!
பெண்கள் இல்லையெனில் நீ, நான் உட்பட யாருமே இப் பூவுலகில் பிறந்திருக்க மாட்டோம் நண்பா!!
பெண்கள் இல்லாத உலகை நினைத்துப் பார்ப்பதும் கடினமே..!!!

- Ifham Aslam - M.Sc in Medical physics (Reading)

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!