இதுவும் ஒரு தொடர்கதையே..!

" எங்கட ஸ்கூல்ல / பொரொஜெக்ட்ல 3 பேர் Medicine, 4 பேர் Engineering , Commerce , Arts ல 3A, 2AB லாம் நிறைய வந்திருக்கு!"
இது போன்ற பெருமை பேசல்கள் பலரால் பேசப்படும் நாட்கள் தான் இவை! ஆம்! பெறுபேறுகள் வெளியாகிய தினமே இன்று!!
" எங்கட ஸ்கூல்ல / பொரொஜெக்ட்ல 100 கும் மேற்பட்ட Science Students, Arts Commerce நாங்க தான் நம்பர் 1, 200 Students இருக்காங்க!! "
ஆம்!! இக்கூற்றும் அவர்களால் கூறப்பட்டதே சில நாட்களுக்கு முன்பு!!!
100 ,200 எனும் எண்கள் ஏனோ சுருங்கி 5,10 இல் முடிந்துள்ளதை நினைத்துப் பார்க்கையில் கவலையளிக்கிறதே!! நல்ல பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் அவர்கள் , பெறுபேறுகள் குறைந்த மாணவர்களை ஏன் தட்டிக்கொடுக்க மறுக்கின்றனர் என்பதை படைத்த இறைவனே அறிவான்!!!
ஏன் இவர்கள் அப்படி என்ன பாவம் தான் செய்தார்கள், அவர்களது முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காவிடினும் அவர்களும் முயற்சியாளர்களே!!!
இவர்கள் இன்னொரு முயற்சியை நோக்கி, சமூகத்தால் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்களே!!! தட்டிக்கொடுக்கப்பட வேண்டியவர்களே!!
எனினும், இச்சமூகம் அவர்களை தட்டி விடத் தான் பார்க்கிறதென்பதே ஆழ்ந்த அனுதாபமான ஓர் விடயமாகும்!!!
ரிசேல்ட்ஸ் கேட்கத் தெரிந்த உங்களால் , ஏன் அவர்களுக்கான ஒரு தீர்வை தர முடியவில்லை?!!! இவர்களுள் சில நல் உள்ளங்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்!! மனவுளைச்சல்களுக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு மன நிம்மதியை வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்...
பெற்றோர்களே !! உங்கள் பிள்ளைகளின் பெறுபேறுகள் அவர்கள் நினைத்ததை விட குறைவாக இருக்கலாம்!! ஒரு பரீட்சையால் மாத்திரம் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது என்பதே உண்மை!!! இன்றைய மாணவர்களே எதிர்கால தலைவர்கள்!!!
மனவுளைச்சல்கள் காரணமாகவும், போதிய ஆலோசனைகள் இன்றியும் பல விபரீத முடிவுகள் எடுக்கும் மாணவர்களையும் கண்டு தான் இருக்கிறோம் கடந்த காலங்களில்!!
பெற்றோர்களே ! உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருக்க வேண்டியது உங்கள் கடமையே!! இன்னொருவரின் பிள்ளைகளைக் காட்டி உங்கள் பிள்ளைகளை மட்டம் தட்டிவிடாதீர்!! மட்டம் தட்டப்பட்டவர்களும் பட்டம் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்!!
மாணவர்களே!! உங்கள் முயற்சியை கைவிடாதீர்!! உங்கள் திறமையை ஒரு பரீட்சையால் அளவிட முடியாது என்பதை மறவாதீர்! வெறும் 5/6 மணித்தியாலத்தில் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடிவு செய்யாதீர்!! இதுவொரு போட்டிப் பரீட்சையே அன்றி, உங்கள் வாழ்க்கைப் பரீட்சை அல்ல!!
உங்களால் பரீட்சையின் போது சில தவறுகள் விடப்பட்டிருக்கின்றதே ஒழிய , நீங்கள் தவறு செய்தவர்கள் அல்ல என்பதை மறவாதீர்!!
' நீங்கள் வேண்டும்' என்று சிலர் உங்களிடம் பெறுபேறுகள் கேட்பர், வேறு சிலரோ ' உங்களை கிளர வேண்டும்' என்று பெறுபேறுகள் கேட்பர்!! இரண்டாம் வகையினரை விட்டு விடுங்கள், முதலாம் வகையினரிடம் ஆலோசனை கேளுங்கள், அறிவுரைகள் பெறுங்கள், வழிகாட்டச் சொல்லுங்கள்... இதெல்லாம் விட்டு விட்டு தனிமையில் முடங்க எத்தனிக்காதீர்... அது உங்களை அடங்கவே செய்யும்! நீங்கள் ஆழ வேண்டுமெனின் முன்னெழுந்து வாருங்கள்!! நீங்கள் விட்ட தவறுகளை சரி செய்து முன்னேறிக்காட்டுங்கள் !!! தோல்விகளை சந்திக்காத சாதனையாளர்களை வரலாறு கண்டதில்லை!! உங்கள் வேதனைகளை உரமாகப் போட்டு சாதனைகள் புரிய முன் வாருங்கள்!!
நீ வீழ்ந்ததை ரசிக்க பலர் இருப்பினும், நீ ஆழ்வதை ரசிக்க சில கண்கள் உனக்காக காத்துக்கொண்டு தான் இருக்கும்!!
சோகத்தை விட்டு விட்டு உன் அடுத்த முயற்சிக்காக வேகத்தைக் காட்டு!! உனக்கான வரலாற்றை எழுத வேண்டியவன் நீ தான் என்பதை பறைசாற்று!! விடியலை நோக்கி இக்கணமே புறப்படு!!
வீழ்ந்த உன்னால் எழும்பவும் முடியும் என்று உலகுக்கு காட்ட வேண்டிய தருணமே இது!! எழும் நீ ஒரு அலையாய் எழு! உன் வெற்றிக்கரையை தொட்டு விடும் வரை உன் வீரியத்தை விடாதே!!
எழும் நீ தீங்கு செய்யாத ஒரு சுனாமியாய் வளம் வர வாழ்த்துகிறேன்!!


இப்(f)ஹாம் அஸ்லம் (MSc in Medical Physics - University of Colombo)

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!