உயர்தரப் பரீட்சை!!



மாணவா!! இரண்டு வருடங்களுக்கும் மேலான உன் பொறுமை, எதற்கும் சளைக்காத உன் விடா முயற்சி, சொல்லில் அடங்காத உன் தியாகங்கள் என்பவற்றைக் கடந்து உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறாய். இந்நிலையில் நீ கடைபிடிக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான்! நிதானம்.
பேரலைகளுக்கு மத்தியில் மீன் பிடிக்க செல்லும் மீனவனை மனதில் வைத்துக் கொள்!! அவனது நிதானமே அவனை வெற்றியுடன் திரும்பச் செய்கிறது.
உனது மனதிலும் பேரலைகள் தோன்றும் தருணமே இது. நிதானத்தை கடைபிடி. புதிய விடயங்களைப் படிப்பதை விட படித்தவற்றை மீட்டிப் பார்ப்பதே நன்று.
வினாக்களுக்கு விடையளிக்கையில் வேகத்துடன் விவேகத்தையும் கடைபிடி! இலகுவான வினாவிலிருந்து விடையெழுத ஆரம்பிப்பது உகந்தது!! அத்துடன் எழுதிய விடைகளை மீள்பரிசீலனை செய்வது நன்று!!
பரீட்சை மண்டபத்தில் காணப்படும் அமைதியான சூழலை உன் உள் மனதிலும் கொண்டு வந்தால் உனக்கு வெற்றி தான்!!!
இவ் உயர் தரப் பரீட்சை உங்களுக்கு வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்!!
இப்(f)ஹாம் அஸ்லம் B.Sc (hons) in Physics, M.Sc in Medical Physics (UOC)( Reading)

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

பாவம் அந்தப் பிள்ளைகள்!