தன்னம்பிக்கை!

உலகின் போக்கிலிருந்து விலகி புதுப்போக்கில் தம் பாதையமைப்பதற்கு, எதையும் எதிர்க்கும் தைரியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்!
எதிர்ப்புகள், விமர்சனங்கள், கலாய்த்தல்கள், ஏச்சுக்கள் என பல முட்டுக்கட்டைகள் உன் பாதையில் வருமே!!
வியர்வை சிந்தும் உனக்கு சோர்வு வரலாம், எப்போதும் விடாமுயற்சியை கைவிடக் கூடாது! தூக்கத்துடன் சேர்த்து துக்கமும் உன்னை ஆட்டிப் படைக்கலாம், சிரிப்போன்றே எப்போதும் உன் முகத்தில் இருக்க வேண்டும்!! வேறொருவர் சென்ற பாதையில் செல்வது சுவாரஸ்யமற்றதே!! உன் பயணத்தில் வெற்றி பெறுவாயாயின் உன்னைப் பின் தொடரவும் ஒரு கூட்டம் வருமே! வரலாற்றில் உன் பெயரும் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படுமே!!
ஒரு சமூக மாற்றத்திற்கு ஆரம்பப்புள்ளியிட்டவனாய் உன்னை இவ்வுலகம் பார்க்குமே! தடைகள் இருக்கும் எனக் கூறப்பட்ட பாதையிலுள்ள தடைகளை உடைத்தெறிந்து உன்னைப் பின்தொடர்வோருக்கோர் புதிய பாதையை உண்டாக்கி விடு!!
உடைக்க முடியாத தடைகள் இல்லை; உன் நடையிலே பல தடைகள் தெறித்துடையட்டுமே!! நாளைய பொழுதுக்காய் இன்று நீ கஷ்டப்படுவதை மறந்து விடாதே!!
உன்னைத் தூற்றுவோரும் போற்றும் நிலையை உண்டாக்க உன்னாலேயே முடியும்!!
திட்டமிடு.. பின் அதை செயற்படுத்து... வெற்றி உனதே!!

இப்ஹாம் அஸ்லம் M.Sc Medical Physics (Reading) University of Colombo

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!