நபிகள் நாயகமவர்கள் மாபெரும் இன்ஸ்பிரஷனே!

இன்ஸ்பிரஷன் தேடும் உயிர்கள் நாம்; இன்ஸ்பிரஷன் இன்றேல் நம் வேகம் "அவ்வளவு தான்". புற்களில் தொடங்கி பேரறிஞர்களின் சொற்கள் வரை பரவியிருப்பது இன்ஸ்பிரஷனே! கைக்குழந்தையின் மழலைப் பேச்சு தொடங்கி கைப்பேசி வரை நிரம்பியிருப்பதும் இன்ஸ்பிரஷனே!
உலகில் இன்ஸ்பிரஷன் தேடும் நாமோ; உலகின் அருட்கொடையாம் உம்மி நபியின் வாழ்க்கை ஒரு இன்ஸ்பிரஷன் என்பதை மறந்து விடுகிறோம்!!
பிறப்பதற்கு முன்னே தந்தையிழந்து, பிறந்தாறாம் வயதில் தாயை இழந்து அனாதையான, அவர்கள் காணாத கஷ்டங்களையா நாம் காண்கிறோம்!
அரேபிய தீபகற்பத்திலே அல்லாஹ்வின் துணையுடன் தனியாளாய் உலகுக்கு நேர்வழி காட்ட போராடியதை விடவா நாம் போராட போகிறோம்?!
குறைஷிகள் செய்யாத கொடுமை தான் என்ன? இட்டுக்கட்டுகளினதும், அவதூறுகளினதும், ஏச்சுக்களினதும் அளவு தான் என்ன?! நாம் என்ன அவர்களை விட பெரிய துன்பங்களா படுகிறோம்?!!
எத்துன்பம் வரினும் பொறுமை காத்த நம் நபியவர்கள் வாழ்க்கை பெரும் இன்ஸ்பிரஷனே!
தம் மீது வீசப்பட்ட கற்களைக் கொண்டே இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பியதை விடவா பெரிய இன்ஸ்பிரஷன் வேண்டும் நமக்கு!!
சிறார்களின் மீது காட்டிய இரக்கமும், பொய் பேசாத அவர்களின் நாவும், பெரியோர்க்குக் கொடுத்த மரியாதையும், எதிரிகள் மீதும் காட்டிய மனிதாபிமானமும், பெண்களுக் கொடுத்த கவுரவமும், மனம் நோகாமல் பேசும் மனிதமும், எல்லையற்ற பொறுமையும் ஒவ்வொரு மனிதனுக்கு இன்ஸ்பிரஷனே!!
மாநபிகள் நாயகத்தை இன்ஸ்பிரஷனாய் எடுப்பின் ஈருலக வெற்றி நிச்சயமே!!
இப்ஹாம் அஸ்லம் M.Sc Medical Physics (Reading) University of Colombo

Comments

Popular posts from this blog

வீழ்ந்துவிட முன் கட்டியெழுப்ப வாரீர்!

உயர்தரப் பரீட்சை!!

பாவம் அந்தப் பிள்ளைகள்!